அசுர வேகத்தில் பூமியை நெருங்கும் இராட்சச விண்கல்!

0
167

பூமியை நோக்கி இராட்சச விண்கல் ஒன்று அதி வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாசா விஞ்ஞானிகள் சூரிய மண்டலத்திற்குள் புதிதாக நடக்கும் விண்வெளி மாற்றங்களை தீவிரமாக ஆராய்ந்த போது, பெரிய விண்கல் ஒன்று பூமியின் திசை நோக்கி வேகமாக பயணித்து வருவதை கண்டறிந்துள்ளனர்.

2020 கியூஎல்2 எனப்படும் இந்த இராட்சத விண்கல்லானது இரண்டு கால்பந்து மைதானங்களை ஒன்றாக சேர்த்த அளவுக் கொண்டது என கூறப்படுகிறது.

குறித்த விண்கல் பூமியுள்ள திசையில் மணிக்கு 38,624 கிமீ என்ற அசுர வேகத்தில் பயணித்து வருவதாகவும், செப்டம்பர் 14ம் திகதி இந்த விண்கல் பூமியை கடந்து செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் குறித்த விண்கல்லால் பூமிக்கு ஆபத்து இல்லை என்றும் பூமியின் வட்டப்பாதையை அது தாண்டி சென்றாலும் பூமியில் மோத வாய்ப்பில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.