ஒரு மணி நேரத்திற்குள் முடிவுகளை வழங்கும் விரைவான உமிழ்நீர் அடிப்படையிலான கொரோனா வைரஸ் சோதனைக் கருவி உற்பத்தி தொடங்கியது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயோடெக்னாலஜி நிறுவனமான SKILLCELL, ஆய்வக CNRS SYS2DIAG மற்றும் டிஜிட்டல் நிறுவனமான VOGO ஆல் உருவாக்கப்பட்ட பிரஞ்சு கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ஜூன் நடுப்பகுதியிலிருந்து ஐரோப்பிய சந்தைகளுக்கு இச் சோதனைக்  கருவி கிடைக்கும் என்று கூறியுள்ளது.

‘EasyCov’ என பெயரிடப்பட்ட இச் சோதனை சுகாதார நிபுணர்களால் கையாளப்படுகின்றது .

மேலும் நோயாளியின் நாவின் கீழிருந்து ஒரு  மில்லிலிட்டருக்கும் குறைவான உமிழ்நீரை சேகரித்து இச்சோதனை செய்யப்படுகின்றது.

இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கொரோனா தொற்று உமிழ்நீர் பரிசோதனையை அங்கீகரித்தது.

 இதில் ஒரு நோயாளி வீட்டில் உமிழ்நீர் மாதிரியை சேகரிக்க முடியும், ஆனால் அதை ஒரு ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும் மற்றும் முடிவுகள் செயலாக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும்.எனவும் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here