அட கடவுளே இது என்ன கொடுமை❕பிரபல டிவி நடிகைக்கு கொரோனாவா ?

0
108

கொரோனா வைரஸ் யாரையும் விட்டுவைப்பதில்லை ஆமாங்க , இப்போது, ​​ஒரு பிரபல தொலைக்காட்சி நடிகை கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பல தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்துள்ள பிரபல தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவரான நவ்யா சுவாமி, கொடிய கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வாணி ராணி, அரண்மனை கிளி, ரன் போன்ற தமிழ் சீரியல்களிலும், சில தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ள நவ்யா சுவாமி தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளார். மீனாட்சி சீரியலுக்கான படப்பிடிப்பின் போது, டிவி நிர்வாகம் அனைத்து நடிகர்களுக்கும் சோதனை ஏற்பாடு செய்திருந்தது. அப்போது தான் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதுதெரிய வந்துள்ளது.

நடிகை நவ்யா சுவாமி கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது சீரியல் நடிகர்கள் மற்றும் தொலைக்காட்சி துறையில் ஒரு பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, படப்பிடிப்பில் ஒரு பகுதியாக இருந்த அனைத்து நடிகர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர் என தகவல் வந்துள்ளது .