அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் சஜித் அதிருப்தி !

64

கனிம வளங்களைப் பெறுவதற்காக சுரங்க நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு , இந்திய நிறுவனம்
ஒன்றுடன் இணைந்து பணியாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார் .

சஜித் பிரேமதாச அமைச்சராக பணியாற்றிய பொழுது அந்த நிறுவனங்கள் சஜித் பிரேமதாசவை சந்திக்க வந்ததாகவும் ,. கிரிந்த கடற்கரையில் உள்ள கனிம மணல் திட்டுககள் ஒருபோதும் விற்கப்படவில்லை என்றும் ,விற்பனை செய்யவும் எதிர்ப்பார்க்கவில்லை என்றும் சஜித் பிரேமதாசதெரிவித்துள்ளார் .

2004 சுனாமி பேரழிவிலிருந்து கிரிந்த கடற்கரையில் உள்ள கனிம மணல் மேடு பல உயிர்களைக் காப்பாற்றியதாகவும் , குறித்த கனிம மணல் திட்டுகளை இந்திய நிறுவனத்திற்கு விற்க எதிர்க்கட்சி அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.கிரிந்த கடற்கரையில் இன்று (12) கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் பங்கேற்றபோதே எதிர்க்கட்சித் தலைவர் குறித்த விடயங்களை தெரிவித்திருந்தார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: