அரைஇறுதியில் சாய்னா தோல்வி!

60

ஆர்லின்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது. குறித்த போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில், இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 17-21, 17-21 என்ற நேர்செட்டில் 28 நிமிடங்களில் டென்மார்க்கின் லின் கிறிஸ்டோபர்சென்னிடம் தோல்வி கண்டு வெளியேறியிருந்தார் .

இதேபோல் பெண்கள் இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி 18-21, 9-21 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் ஜோங்கோல்பான் கிதிஹராகுல்-ராவின்டா பிரஜோன்ஜாய் இணையிடம் தோற்றிருந்தது .