அலுவலக நேரத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை

0
123

அலுவலக நேரத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அலுவலக நேரங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழு குறித்த யோசனையை முன்வைத்துள்ளது.

இது குறித்த பரிந்துரை அடங்கிய அறிக்கையை போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இன்றைய தினம் கையளிக்கவுள்ளதாக குறித்த குழுவின் தலைவர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமைச்சர் குறித்த அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னர், அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குழுவின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.