ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய-சிம்பாம்வே ஒருநாள் தொடர்

0
124

தற்போது கொரோனா காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கிரிக்கட் தொடர்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் சிம்பாம்வே அணியுடனான ஒருநாள் தொடருடன் மீண்டும் அவுஸ்திரேலிய அணி கிரிக்கட் போட்டிகளை விளையாட ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு, வடக்கு அவுஸ்திரேலியாவின் டவுன்ஸ்வில் மைதானத்தில் இடம்பெறவுள்ள முதலாவது சர்வதேச ஒருநாள் தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய மற்றும் சிம்பாம்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டித் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.