நாகர்கோவில் காசி வழக்கில் சுமார் 400 பக்க குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி பொலிஸார் தாக்கல் செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பழகி சென்னை பெண் டாக்டர் உள்பட பல இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த காசி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏற்கனவே காசி மீதான ஒரு கந்து வட்டி வழக்கில் சிபிசிஐடி பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
இது தவிர நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 வழக்குகள், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் நாகர்கோவில் நேசமணிநகர் காவல் நிலையத்தில் தலா ஒரு வழக்கும், சிபிசிஐடி பொலிஸார் தனியாக ஒரு வழக்கும் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் பாலியல் வன்கொடுமை, ஆபாச படமெடுத்து மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்தவை.
இந்த வழக்குகளில் தனித்தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி பொலிஸார் முடிவு செய்தனர். அதன்படி நாகர்கோவில் நேசமணிநகர் காவல் நிலையத்தில் பதிவாகி இருந்த வழக்கு தொடர்பாக நேற்று மாலை, நாகர்கோவில் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
சுமார் 400 பக்க குற்றப்பத்திரிகையில், இளம்பெண்களிடம் எவ்வாறெல்லாம் பழகி காசி மற்றும் அவரது நண்பர்கள் ஏமாற்றினர் என்பது தொடர்பான தகவல்கள் மற்றும் ஆதாரங்களை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், ஆபாச வீடியோக்கள் எடுத்து ஈவு இரக்கமின்றி இளம்பெண்களை கொடுமைப்படுத்தி காசி கும்பல் ரசித்துள்ளதாகவும், பெண்களிடம் மிக கொடூரமானவர்களாக நடந்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் சிபிசிஐடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. பொங்கல் விடுமுறைக்கு பின் மேலும் 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
- செல்போனில் பேசியபடி சென்ற தமிழ் பெண்.. நொடியில் ‘கிரில் சிக்கன்’ மெஷினால் நடந்த அதிர்ச்சி.. பரபரக்க வைத்த சம்பவம்..!
- சிங்க வேடமிட்டுள்ள நரிகளுக்கு சிங்கள மக்கள் ஏமாற மாட்டார்கள் – பியல் நிஷாந்த
- விமானநிலையம் திறக்கப்படும் திகதி அறிவிப்பு
- பக்தர்களை வரவேற்று ஆசி வழங்கும் நாய்! வைரலாகும் காணொளி
- முள்ளிவாய்க்காலுக்கு மட்டும் தூபி வேண்டாம்; பொதுத்தூபி அமைப்போம்: ஈ.பி.டி.பி!
- இலங்கையில் புதிய வகை கொரோனா; மக்களே எச்சரிக்கை!
- காதலித்த பெண்ணை ஏமாற்றிய யாழ் இளைஞன்? தற்போது அந்த பெண் பிக்பாஸ் வீட்டுக்குள்!
- ‘காதலிக்க ஒரு துணை தேவை’ சூட்சுமமான விளம்பரம் மூலம் விபசாரம்-9 பேர் கைது!
- இலங்கை வரும் பயணிகளுக்கு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை விசேட அறிவிப்பு!
- யாழில் கடும் மழை காரணமாக 1047 பேர் பாதிப்பு!
- விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமான கருப்பு பெட்டி சிக்கியது, விமானத்தின் விமானி குறித்த பரபரப்பு தகவல்கள்!
- அந்த வீடியோ பக்கா ஸ்கிரிப்ட்’… ‘என்ன என்னெல்லாம் பேச சொன்னாங்க தெரியுமா’… உண்மையை போட்டுடைத்த வைரல் பெண்!
- தடுப்பை உடைத்து வெளியே பாய்ந்த ரயிலை தாங்கிப் பிடித்த திமிங்கிலம்; தற்போது வெளியான தகவல்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்