ஆரி தொடர்பில் இப்படி ஒரு பதிவு போட உங்களுக்கு எப்படி மனது வந்தது? சர்ச்சையை கிளப்பியுள்ள சுசித்ரா!

1237

ஆரியை எனக்கு சுத்தமா பிடிக்காது, அவரை சப்போர்ட் செய்ததற்கு காரணம் இதுதான் என பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார் சுசித்ரா.

Suchitra Blast Aari : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்த இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றிருந்தவர் சுசித்ரா.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த புதிதில் பரபரப்பான போட்டியாளராக இருந்த சுசித்ரா அதன் பின்னர் பாலாஜியின் எடுபிடியாக மாறிவிட்டார். அவருக்கு சப்போர்ட் செய்தே பேசி வந்தார்.

இதனால் போன வேகத்திலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். வெளியேறிய பின்னரும் சமூக வலைதளப் பக்கத்தில் பாலாஜிக்கு ஆதரவாகவே பதிவுகளை பதிவிட்டு வந்தார்.

அதன் பின்னர் திடீரென ஒருநாள் ஆரிக்கு ஓட்டளியுங்கள். அவர்தான் ரியல் ஹீரோ என கூறி தன்னுடைய 50 ஓட்டங்களையும் ஆரிக்கு அளித்ததாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

இப்படியான நிலையில் பதிவு ஒன்றில் உங்களுக்குத்தான் ஆரியை பிடிக்கும் அல்லவா என ரசிகர் கேட்டதற்கு எனக்கு அவரை சுத்தமாக பிடிக்காது. அவருடைய சில்லியான திமிர் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் தான் திருப்தி அடையும்.

அந்த ஒரு காரணத்திற்காக தான் அவருக்கு சப்போர்ட் செய்தேன் அவர் சாத்தானின் வக்கீல் என சாடியுள்ளார்.

சுசித்ராவின் இந்தப்பதிவு ஆரி ரசிகர்களிடையே கோபத்தை உருவாக்கி உள்ளது. பலரும் சுசித்ராவை விமர்சனம் செய்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: