இங்கிலாந்திடம் தடுமாறும் மே.இந்திய தீவுகள் அணி

0
52

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

மேலும் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கட்களை இழந்து 10 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

எனினும் முன்னதாக தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 2 விக்கட்களை இழந்து 226 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

மேலும் இதற்கமைய தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்து 369 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பின்னர் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டிருந்தது.

இந்நிலையில் போட்டியில் வெற்றி பெறுவதற்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 389 ஓட்டங்கள் தேவையாகவுள்ளது.