இத்தாலியில் உள்ள ஒரு குகையில் ஒன்பது நியண்டர்டால் ஆண்களின் (Neanderthal men )புதைபடிவ எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் கலாச்சார அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்திருந்தது .

குறித்த புதைபடிவ எச்சங்கள் தொடர்பில் இத்தாலியின் கலாச்சார அமைச்சகம் தெரிவிக்கையில் , இது நமது பண்டைய உறவினர்களின் ஆய்வில் ஒரு முக்கிய கண்டுபிடிப்பாகும் . ரோம் மற்றும் நேபிள்ஸ் இடையே கடற்கரையில் அமைந்துள்ள சான் பெலிஸ் சிர்சியோவில் உள்ள குவாட்டாரி குகையில் கண்டுபிடிக்கப்பட அனைத்து நபர்களும் வயதானவர்கள் . ஆனால் ஒருவர் இளைஞராக இருக்கலாம் எனவும் குறித்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது

குறித்த கண்டுபிடிப்பை “உலகம் முழுவதும் பேசும் ஒரு அசாதாரண கண்டுபிடிப்பு” என்று கலாச்சார அமைச்சர் டாரியோ பிரான்செசினி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. குறித்த புதைபடிவ எச்சங்களில் எட்டு 50,000 முதல் 68,000 ஆண்டுகளுக்கு முந்தையது எனவும் அதே சமயம் 90,000 அல்லது 100,000 ஆண்டுகள் பழமையானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.