இந்தியன் 2 வில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
53

23 வருடத்திற்கு பின் ஷங்கர் மற்றும் கமல்ஹாசனின் கூட்டணியில் ‘இந்தியன் 2’ 2018 ஆம் ஆண்டின் நடுவில் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது, ​​நாடு முழுவதும் உள்ள சங்கர் மற்றும் கமல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஆனால் ,பல காரணங்களால் இப்படம் எடுக்க தடங்கல் ஏற்பட்டு கொண்டிருந்தது.

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இந்த ஆண்டு மீண்டும் தொடங்கியது மற்றும் பிப்ரவரி 19 அன்று கனரக விளக்குகளை ஏற்றிச் சென்ற கிரேன் தரையில் மோதி மூன்று பேர் இறந்தனர், மேலும் சம்பவ இடத்திலிருந்த கமல், காஜல் அகர்வால் மற்றும் சங்கர் ஆகியோர் தப்பி பிழைத்தனர். இந்த துயரங்களுக்குப் பிறகு, இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

விபத்து நடந்த ஈ.வி.பி சிட்டியில் இருந்து பல்லாவரத்தில் உள்ள பின்னி மில்ஸ் வளாகத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் மீதமுள்ள காட்சிகள் ஒரே நேரத்தில் படமாக்கப்படும் என்றும்,அதனால் ஏற்கனவே அதிக காட்சிகள் இருப்பதால் படத்தை இரண்டு பகுதிகளாக வெளியிடுவதற்கான திட்டங்களும் உள்ளன என்றும் தகவல் வந்துள்ளது.இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.