இந்தியாவில் 1 இலட்சத்து 90 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா

0
104

இந்தியாவில் கொரோனா வைரஸால் ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 622 பேருக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 408 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு இன்று தொடங்கி உள்ள நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு புள்ளிவிவரத்தை வெளியிட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 8 ஆயிரத்து 392 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 230 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 394 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 91 ஆயிரத்து 819 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 4 ஆயிரத்து 835 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 93 ஆயிரத்து 322 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 67 ஆயிரத்து 655 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 22 ஆயிரத்து 333 பேருக்கும் டெல்லியில் 19 ஆயிரத்து 844 பேருக்கும் குஜராத்தில் 16 ஆயிரத்து 779 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.