இந்த வாரம் உலகளவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக கிளப்ஹவுஸ் ஆப் வெளியாகும் என்று கிளப்ஹவுஸ் நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது.

கிளப்ஹவுஸ் நிறுவனம் தனது iOS பயன்பாட்டில் கிடைப்பது போன்ற அம்சத்துடன் ஆன்ட்ராய்டு பயன்பாட்டையும் உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் ஆன்ட்ராய்டு பயன்பாட்டின் பீட்டா பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

டெக் க்ரஞ்ச் அறிக்கையின்படி, கிளப்ஹவுஸ் ஆண்ட்ராய்டு பயன்பாட்டை ஜப்பான், ரஷ்யா மற்றும் பிரேசிலில் செவ்வாய்க்கிழமை வெளியிடும் என்று தெரியவந்துள்ளது. இந்தியா மற்றும் நைஜீரியா போன்ற பிற சந்தைகள் மூன்று நாட்களுக்குப் பிறகு ஆன்ட்ராய்டு பயன்பாட்டைப் பெறும், அதைத் தொடர்ந்து உலகளவில் வெளியயிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: