இன்றைய தினத்தில் 13 பேர் அடையாளம்

0
297

இலங்கையில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேர் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை  ஆயிரத்து 68 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 439 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான 620 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நோய்த்தொற்று சந்தேகத்தில் 110 பேர் நாடாளாவிய ரீதியில் 29 வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here