உத்தியோகத்தில் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள் ;இன்றைய ராசிபலன்;21.02.2021

69

மேஷராசி அன்பர்களே

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாளாக வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். கடனாக கொடுத்த பணத்தை திரும்ப வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

ரிஷபராசி அன்பர்களே

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்துநீங்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின்எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். விட்டுக் கொடுத்து செல்லவேண்டிய நாள்

மிதுனராசி அன்பர்களே

எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமானசூழ்நிலையை சமாளிக்க வேண்டும். உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கடகராசி அன்பர்களே

எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சபைகளில்மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.

சிம்மராசி அன்பர்களே

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் பயன் அடைவீர்கள். பயணங்களால் ஆதாயமடைவீர்கள் விஐபிகள் அறிமுகமாவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும்நாள்.

கன்னிராசி அன்பர்களே

கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நல்லன நடக்கும் நாள்.

துலாராசி அன்பர்களே

சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. யாரையும்தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில்அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்

விருச்சிகராசி அன்பர்களே

திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை கூடிவரும். மனைவி வழியில்நல்ல செய்தி வரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில்அதிகாரிகளுக்கு பல ஆலோசனை தருவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

தனுராசி அன்பர்களே

உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களைமாற்றுவீர்கள். உத்தியோகத்தில்  உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்

மகரராசி அன்பர்களே

வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

கும்பராசி அன்பர்களே

தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றிஅவ்வப்போது யோசிப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். தொழிலில்லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மீனராசி அன்பர்களே

பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள்நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். தைரியம் கூடும் நாள்.

shadow.png