மேற்கத்திய நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தங்களை மகிழ்ச்சியடையச் செய்வதாக ஐ.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் Abu Hamzah al-Quraishi என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒருவர், அந்த அமைப்பின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள குரல் பதிவொன்றில்  இவ்வாறு தெரிவிக்கப்படுள்ளது.

இக் காலகட்டத்தில் கொடுங்கோலர்கள் மீது கடவுள் தம் சித்தப்படி அனுப்பிய தண்டனைதான் கொரோனா வைரஸ் .

அதை வெறுங்கண்களால் பார்க்க முடியாது. 

இன்று, உங்களுக்கு கடவுள் அளித்த இந்த தண்டனைக்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறுகிறது அக் குரல்பதிவு .

அமெரிக்க சிறப்புப் படைகளால் வடமேற்கு சிரியாவில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, Abu Ibrahim al-Hashemi al-Quraishi புதிய தலைவராக பொறுப்பேற்றபின் வெளியிடப்படும் மூன்றாவது குரல் பதிவு இதுவாகும்.

ஐ.எஸ் அமைப்பின் போராளிகள் எங்கிருந்தாலும், கடவுளின் எதிரிகள் மீது கடுமை காட்டவும் அவர்களது இடங்களை தாக்கவும் தயாராக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் Quraishi.

அவர்களது வாழ்க்கையை நாசமாக்காமல் ஒரு நாளைக்கூட செலவிடக்கூடாது என்று கூறியுள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here