மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் உள்ள ரெம்டெசிவர் மருந்து தயாரிப்பு ஆய்வகத்தை ஆய்வு செய்த இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ரெம்டெசிவர் மருந்து உற்பத்தியை அதிகரிக்க இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த ஆய்வகத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரெம்டெசிவர் மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். உற்பத்தியை அதிகரிப்பதால் மருந்து பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் எனவும் இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.

மேலும் கருத்துரைத்த நிதின் கட்கரி, ரெம்டெசிவர் மருந்து அரசு நிர்ணயம் செய்த விலையில்தான் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணித்து வருவதாகவும், கள்ளச் சந்தையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.