உலகில் முதல்முறையாக ஒன்லைன் விசாரணையில் வழங்கப்பட்ட மரண தண்டனை

0
60

உலகில் முதல்முறையாக சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான குற்றவாளிக்கு, ஜூம் (Zoom) செயலி மூலம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

மலேஷியாவை சேர்ந்தவர் புனிதன் கணேசன், கடந்த 2011ம் ஆண்டு நடந்த ஹெராயின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூரிலும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நீதிமன்ற பணிகள் அனைத்தும் வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடக்கிறது.

இந்த வழக்கும் Zoom செயலி மூலம், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக சிங்கப்பூர் உச்சநீதிமன்ற செய்தி தொடர்பாளர் கூறுகையில், “விசாரணையில் தொடர்புடைய அனைவரின் பாதுகாப்பு கருதி வழக்கு வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது.

வீடியோ கான்பரன்சிங் முறையில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை” எனத் தெரிவித்துள்ளார்.

ஒன்லைன் மூலமாக மரண தண்டனை வழங்கப்பட்டதற்கு அந்நாட்டின் மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here