கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட வூஹான் நகரம் தற்போது எப்படி உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் வூஹான் நகரில் கொரோனா பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இதுகுறித்து சியோங் லியான்ஷெங் என்ற 66 வயது நபர் கூறுகையில், ‘வூஹான் இப்போது சீனாவின் பாதுகாப்பான நகரம். ஏன் உலகத்திலே பாதுகாப்பான நகரம் என்றுகூட சொல்லலாம். தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த வூஹான் மக்களுக்கு விழிப்புணர்வு மிக அதிகம். என் இரண்டு வயது பேரன் கூட வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்துகொண்டுதான் செல்வான்’ என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வூஹானில் கொரோனா பாதிப்பு மிக குறைவாக உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். பார்க், ஆற்றங்கரை என காதலர்கள் அச்சமின்றி சுற்றி வருகின்றனர். இதுதொடர்பாக தெரிவித்த வயதான சீன தம்பதியினர், ‘வூஹான் மக்கள் அனைவரும் நகரத்தில் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறார்கள். நாங்களும் இங்கு வந்து தினமும் மகிழ்ச்சியுடன் ஆடல் பாடலுமாக உற்சாகமாக இருக்கிறோம்’ என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் 2021ம் ஆண்டை வரவேற்கும் விதமாக புத்தாண்டு நள்ளிரவில் வூஹான் நகர மக்கள் பலூன்களை பறக்கவிட்டு கொண்டாடினர்.
பிற செய்திகள்:
- பொது சுகாதார பரிசோதகர் எனக்கூறி பெண் செய்த செயல்-மக்களே உஷார்..!
- மேலும் 434 பேர் இலங்கைக்கு வருகை
- தனியார்துறை ஊழியர்களின் சம்பளத் தொகை குறித்து வெளியாகியுள்ள முக்கியத் தகவல்..!
- வாட்ஸ் அப் தெரிவித்துள்ள முக்கிய அறிவிப்பு- உத்தியோக பூர்வ தகவல் வெளிவந்துள்ளது..!
- நிரபராதியென நிரூபிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவது அநீதி; தமிழ் கைதி 6 நாட்களாக உணவுதவிர்ப்பு போராட்டம்..!
- திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம்?
- யாழில் நினைவுத் தூபி இடித்தழிப்பு விவகாரம்? அரசாங்கம் வெளியிட்டுள்ள திடீர் அறிவிப்பு..!
- வவுனியாவிலுள்ள பல பாடசாலைகளுக்கு பூட்டு: சில பகுதிகள் முடக்கம்; வெளியான அறிவிப்பு!
- அடுத்த கட்டத்திற்கு செல்லும் இலங்கை; எதிர்வரும் 15-ம் திகதி புதிய சேவை!
- இளம் பெண்ணிடம் கேட்ட கேள்வி ; யூடியூப் சேனல் குழுவிற்கு நேர்ந்த கதி..!
- மக்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்த பாராளுமன்ற உறுப்பினருக்கு கடூழிய சிறை; நீதிமன்றம் அதிரடி!
- விறகு தேடிச் சென்றவரை தேடியவர்களிற்கு காத்திருந்த அதிர்ச்சி!
- யாழ்.பல்கலை துணைவேந்தரிடம் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்துள்ள பகிரங்க கோரிக்கை!
- வவுனியா முற்றாக முடக்கம்? சற்றுமுன் எடுக்கப்பட்ட விசேட தீர்மானம்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்