ஊரடங்கில் உருவாகிய படம் -டிரைலர் பார்த்து வரவேற்க்கும் ரசிகர்கள்

0
93

இந்த ஊரடங்கில் சமீபத்திய சில தளர்வுகளுக்குப் பிறகுதான், மக்கள் மெதுவாக பணியிடங்களுக்கு திரும்பி வருகிறார்கள், மேலும் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே அலுவலகங்களிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் ,திரைப்படத் துறையிலும் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டு, சமீபத்தில் சில நிபந்தனைகளோடு போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளை மட்டுமே அரசு அனுமதித்துள்ளது. ஆனால், சமீபத்தில் மியா மல்கோவா நடித்த தனது ‘க்ளைமாக்ஸ்’ திரைப்படத்திற்காக செய்திகளில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய இயக்குநர் ராம் கோபால் வர்மா, இப்போது கொரோனா வைரஸைப் பற்றிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதுவும், இப்படத்துக்கு ‘கொரோனா வைரஸ்’ என்றே பெயர் வைத்துள்ளார்.

நேற்று, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “CORONAVIRUS எனப்படும் ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளேன். இது முழுக்க முழுக்க LOCKDOWN காலகட்டத்தில் படமாக்கப்பட்டது. இது கொரோனா வைரஸ் பற்றிய உலகின் முதல் திரைப்படமாக இருக்கும்.. நமது நடிகர்கள் மற்றும் குழுவினர் படைப்பாற்றலை லாக் டவுனில் கூட பூட்ட முடியாது என்பதை நிரூபித்தனர் ???? டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு” என பதிவிட்டிருந்தார்.அந்தவகையில் ,டிரைலர் ரிலீஸ்-ஆகி வரவேற்பை பெற்றுள்ளது .