நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள நிலையில்  தற்போது ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்று முன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது .

குறித்த தினம் முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டமானது, மறு அறிவித்தல்வரை இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை அமுலாக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல், கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here