ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டியில் பங்குகொண்ட வீரர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். வெளிநாட்டு வீரர்களைப் பாதுகாப்பாக அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்புவது பிசிசிஐக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் அங்கே செல்ல தடையிருப்பதால் மற்ற நாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்பி விட்டனர். எனினும் சிஎஸ்கே அணியின் கேப்டன் டோனி இன்னும் ராஞ்சிக்கு செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும், இதர நிர்வாகிகளும் சொந்த இடங்களுக்கு செல்வதற்கு விமானங்களில் அவர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் , அதற்குப் பிறகு இந்திய வீரர்கள் சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் ,அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குச் சென்ற பிறகு கடைசி ஆளாக நாளை நான் செல்கின்றேன் என சிஎஸ்கே அணியினருடனான இணைய உரையாடலில் தோனி கூறியதாக சிஎஸ்கேவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் ஆங்கில ஊடகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.