ஏழைகளுக்கு உதவும் நோக்கில் காகிதத்தில் மின்சாரம் தயாரித்து சாதனை

0
326

சான்டா மரியா பெடரல் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் கெல்லி மொரேரா தனது கண்டுபிடிப்பை காட்சிப்படுத்தி விளக்கியுள்ளார். 

நீராவி வடிவில் காற்றில் இருக்கும் நீர் மூலக்கூறுகளை வைத்து ஆற்றலை உருவாகியுள்ளார். 

பின்னர் அதனை பிடித்து கிராபைட் பூசப்பட்ட காகிதத்தில் செலுத்தி மின்சாரத்தை தயாரித்துள்ளார்.  

இவ்வாறு  தயாரிக்கப்பட்ட மின்சாரத்தின் மூலம் 60 எல்.இ.டி. மின்சாரங்களையும் செயல்பட வைத்துள்ளார்.

மேலும் இத் திட்டத்திற்கு மிக மிக குறைந்த அளவு செலவு செய்யப்பட்டதாக மாணவி தெரிவித்தார். 

மேலும் மொரேராவின் இத் திட்டம் தொடக்க நிலையிலேயே இருந்தாலும் எதிர்காலத்தில், இத் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கும் மின்சாரம் தயாரித்து வழங்கமுடியும் என தெரிவித்தார். 

குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கப்படும்  இச் செயல்முறை, சர்வதேச அளவில் ஏழைமக்களுக்கு பயன்படும் விதத்தில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here