கொரோனவால் இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது பகுதியை வரும் செப்டம்பர் மாதம் நடத்த இலங்கை கிரிக்கெட் முன்வந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது பகுதியை நடத்த இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளன. இந்நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் போட்டி தலைமை நிர்வாக அதிகாரியான அர்ஜுன டி சில்வா கூறுகையில், “வரும் செப்டம்பர் மாதம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரை நடத்த முதல் வாய்ப்பாக பிசிசிஐ கருதுவதாக தெரியவந்தது.

அப்படியிருக்கையில் இலங்கை கிரிக்கெட் போர்டு ஒதுக்குவதற்கு காரணம் எதுவும் தற்போதைய நிலையில் இல்லை. வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை நடத்த நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். அப்படியிருக்கையில் அடுத்ததாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக எங்களால் நடத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.