இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையிலும் , ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பாதுகாப்பு வளையத்திற்கு மத்தியில் நடைபெற்று வந்தன . இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால், கொல்கத்தா, ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதேபோல், சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் சஹா மற்றும் டெல்லி அணியின் அமித்மிஸ்ராவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா இந்தாண்டு ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: