“ஐஷ்வர்யா ராஜேஷுக்கு திருமணம்” – விமர்சனத்திற்குள்ளான புகைப்படம் !

334

காக்கா முட்டை படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கின்றார் . நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் , அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர் கொண்டாவுடன் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ என்ற படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் , ஜெயம் கொண்டான் பட இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கி வரும் , மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர் .

அந்த படத்தின் முக்கிய காட்சியான ராகுல் ரவீந்திரன், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தாலி கட்டுவது போல் உள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறித்த புகைப்படத்தைப் பார்த்த பலரும் “ஐஷ்வர்யா ராஜேஷுக்கு திருமணம் ” என்று நம்பி விட்டதாக விமர்சித்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: