திருகோணமலை நகரில் தலைமையகப்பொலிஸ்பிரிவிற்குற்பட்ட கடந்த 10.02.2021 அன்று என்.சீ. வீதியில் மாலை 6.30 மணியளவில் நகைகடையில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் ஆறு நபர்களை கைதுசெய்ததாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் புல்மோட்டை பிரதேசத்தில் மூவரும் ,மொரவெவ பிரதேசத்தில் ஒருவரும்,சமுத்திராகம பிரதேசத்தில் ஒருவரும்,சீனன்குடா பிரதேசத்தில் ஒருவருமாக ஆறு நபர்களை கைது செய்ததாக தலைமையகப்பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு நகை கடையில் கொள்ளைபோன 35 பவுன் நகைகளில் 17 பவுன் நகைகள் கொள்ளையர்களால் புத்தளம் மாவட்டம் கற்பிட்டி,மாரவில பிரதேசங்களில் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் நகைகள் மீட்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
எனினும் கொள்ளையில் பிரதான சந்தேகநபரும் கொள்ளை கூட்டத்தின் தலைவராக செயற்பட்ட 34 வயதுடையவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கியும் ஆறு தோட்டாக்களுடனான மெகசீனும் ஒரு கைகுண்டும் ஒரு வாளும் கைப்பற்றபட்டதாக தலைமையகப்பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பிரதான சந்தேக நபர் 2005.10.30 திகதி இரானுவ புலனாய்வு பொறுப்பாளர் கேணல் ரிஸ்வி மீடினை கொழும்பில் வைத்து சுட்டு கொலை செய்த ஐஸ் மஞ்சு என்பவரின் சகோதரர் ஆவார்.
அத்தோடு ஜஸ் மஞ்சுவே தன்னிடம் கைத்துப்பாக்கியை 2008 ஆம் ஆண்டு வழங்கியதாகவும் அந்த கைத்துப்பாக்கியையே தாம் கொள்ளையின் போது பாவித்ததை ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் தலைமறைவான ஜஸ் மஞ்சு தற்போதும் தமது சகோதரருடன் தொடர்புகளை பேணிவருவதாக சந்தேகம் தெரிவித்த பொலிஸார் கேணல் மீடினை சுட பயன்படுத்திய கைத்துப்பாக்கி தற்போது கைப்பற்றப்பட்டதாக கைத்துப்பாக்கியாக இருக்கலாமென்ற அடிப்படையில் விசாரணைகளை துரிதப்படுத்தியதுடன் கைது செய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட ஆயுதம் மற்றும் நகைகளை நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கையை மேற்கொள்ளவதாக தலைமையகப்பொலிஸார் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
- மன்னார் பேசாலையை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு டெங்கு!
- வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்றுறுதி!
- 9 வயது சிறுவன் உயிரிழப்பு-கதறும் உறவுகள்!
- இலங்கையில் முதற்தடவையாக தாதி ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு
- மேலும் 315 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
- நடுவானில் மற்றுமொரு விமானத்துக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
- வர்த்தமானி அறிவிப்பு வெளியானதும் கொரோனா விடயத்தில் எழுந்துள்ள புதிய சர்ச்சை!
- திருமலை கோணேஸ்வரர் ஆலயத்தில் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு
- இனவாதத்தை கையிலெடுத்து ஆட்சிக்கு வந்த அரசுக்கு நேற்றுவரை ஜனாஸா எரிப்பு தேவைப்பட்டது;இன்று முகம் மூடுதல் மற்றும் ,மதரஸாக்கள் தடை தேவைப்படலாம்..!
- கணவன் மீது வழக்கு தொடுத்த மனைவி; எதற்கு வழக்கு தெரியுமா? நீதிபதியின் தீர்ப்பால் வெடித்தது சர்ச்சை..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்