ஒரு பணிஸ் திண்பண்டத்தில் 12 ரூபா கொமிஷன், அமைச்சர் ரோஹிதவின் ஊழல் ஜனாதிபதி கவனத்திற்கு!

153

துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தனவின் சில மோசடி நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

துறைமுக ஊழியர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் உணவு பொதி பொலிதீன் மற்றும் கடதாசியால் இதுவரை பொதிசெய்து வழங்கப்பட்டது. இதனை சுகாதார பாதுகாப்பு இல்லை எனக்கூறி புதுவகை அடைப்பு பெட்டி ஒன்றை அமைச்சர் அறிமுகம் செய்துள்ளார். அதன்மூலம் ஒரு உணவுப் பொதியின் விலை 120 ரூவா வரை அதிகரித்துள்ளது. துறைமுக ஊழியர்களுக்கு வழங்கப்படும் பனிஸ் திண்பண்டத்திலும் 12 ரூபா அமைச்சருக்கு கொமிஷன் பணமாக செல்வதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

துறைமுக ஊழியர்களின் மாதாந்த உணவு செலவு 39 மில்லியனுக்கு கட்டுப்படுத்த வாய்ப்பு உள்ள போதும் தற்போது அது 100 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இவற்றின் பின்னணியில் ரோஹித அபேகுணவர்த்தன வசமுள்ள ஹோட்டலின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறான ஊழல் மோசடி விடயங்கள் குறித்து துறைமுக ஊழியர்கள் ஜனாதிபதிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து துறைமுக அதிகார சபை தலைவர் முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவை தொலைபேசியில் அழைத்த ஜனாதிபதி இ்த குற்றச்சாட்டுக்கள் குறித்து உடனே ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார்.

துறைமுக அதிகார சபை பொறுப்புக்களை நிறைவேற்றவே தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன ஏதெனும் அழுத்தம் கொடுத்தால் உடன் தனக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக தெரிய வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: