கடந்த 24 மணி நேரத்தில் 518 பேருக்கு புதிதாக கொரோனா தொற்றுறுதி

0
1339

சிங்கப்பூரில் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்து 884 ஆக உயர்ந்துள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா சிங்கப்பூரையும் விட்டுவைக்கவில்லை. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 518 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் 3 பேர் மாத்திரமே சிங்கப்பூர் மக்கள் என்றும் மற்றைய அனைவரும் அங்கு தங்கி வேலை பார்த்துவரும் வெளிநாடுவாழ் மக்கள் என்றும் அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்து 884 ஆக உயர்ந்துள்ள போதிலும் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து கடந்த மே மாதத்தில் இருந்து அங்கு வணிக நிறுவனங்கள் செயற்பட அனுமதி அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here