கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பீ.சி.ஆர். பரிசோதனைகள் ஆரம்பம்

0
988

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலைய வளாகத்துக்குள்ளேயே பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் பீ.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான உபகரணங்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன ரணத்துங்கு அண்மையில் அறிவுறுத்தியிருந்தார்.

அதற்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் இன்று முதல் மீளத் திறக்கப்பட்டுள்ளமையினால், பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.