கணவனிடம் எதிர்பார்த்து ஏங்கும் ஆல்யா மானசா – அது என்ன தெரியுமா?

0
67

சின்னத்திரையின் மறக்க முடியாத அழகான ஜோடிகளுள் ஒருவர் தான் ஆல்யா மானசா & சஞ்சீவ் கார்த்திக். சீரியல் மூலமாக சந்தித்து காதலித்து சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு ஒரு அழகான பெண்குழந்தையும் பிறந்தது. திருமணத்திற்கு பிறகு ஆல்யா மானசா நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார். அவரது குழந்தையின் புகைப்படத்தை கூட சில நாட்களுக்கு முன் ஆல்யா மானசா சமூக வலைத்தளம் வாயிலாக வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி குடுத்தார். ஆல்யா மானசாவுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

மே 27ம் தேதி ஆல்யா மானசாவுக்கு பிறந்தநாள். இன்னும் 4 நாட்களே உள்ளன. மேலும் இவரது ரகசிய திருமணமும் அன்று தான் நடந்தது என்றும் ஏற்கனவே அவரே கூறியுள்ளார். எனவே, ஆல்யா மானசா & சஞ்சீவ் கார்த்திக் இவர்களது முதலாம் ஆண்டு திருமண நாளும் அன்று தான் என்பதால் ஆல்யா மானசா மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருப்பதாக தனது சமூக வளைத்ததில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த நாளில் அவரது கணவர், சஞ்சீவ் என்ன பரிசளிக்க போகிறார் என்பதை அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

இவருடைய இந்த பதிவிற்கு ரசிகர்கள் இப்போதே வாழ்த்துக்களை குவிக்க ஆரம்பித்துவிட்டனர்.