கமலுடன் இணைந்த விஜய்சேதுபதி என்ன படம் தெரியுமா?

0
76

கமல்ஹாசன் தனது நீண்ட கால தாமதமான படமான தலைவன் இருக்கிறான் திரைப்படத்தை திரும்ப தொடங்குவதாக அறிவித்திருந்தார், இது லைகா நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் என்றும், இதற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த படம் கமல்ஹாசனின் 1992 ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் தேவர் மகனின் தொடர்ச்சியாகும் என்றும், இதில் முதல் பகுதியிலிருந்த வடிவேலு மற்றும் ரேவதி போன்ற நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்றும் சொன்ன நிலையில் இப்போது ஒரு செய்தி பரவி வருகிறது.

ஆமாங்க ,தலைவன் இருக்கிறான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்பு இருக்கு என்றும் அதுமட்டுமில்லாமல், அவர் படத்தில் நாசரின் மகனாக நடிக்கலாம் என்பது தான். நாசரின் கதாபாத்திரம் முதல் பகுதியில் முடித்து விடுவதால் அவரது மகன் கதாபாத்திரம் இந்த பாகத்தில் இடம் பெறலாம் என தகவல் சோசியல் மீடியாவில் வலம் வருகிறது.