கல்லீரலின் ஆரோக்கியமற்ற தன்மையை வெளிக்காட்டும் அறிகுறிகள்

0
86

மனித உடலிலேயே கல்லீரல் தான் மிகப்பெரிய உறுப்பு. அதே சமயம் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும் முக்கிய பணியையும் கல்லீரலால் தான் ஆற்றப்படுகிறது. இது நம் உடலில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

இப்போதெல்லாம் நாம் வாழும் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களால் முதலில் பாதிக்கப்படுவது கல்லீரல் தான்.

கல்லீரலில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும், அது உடலில் நச்சுக்களை தேங்க செய்வதோடு, வயிற்றுப் பகுதியில் கொழுப்பு செல்களையும் தேங்க வைக்கும்.

எப்போது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்புக்கள் தேங்குகிறதோ, அப்போது கல்லீரலில் நோய் ஏற்பட ஆரம்பமாகிறது.

இவ்வகையான நோய் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒன்று அல்கஹால் மற்றொன்று அல்கஹால் அல்லாதது. அதிகப்படியான அல்கஹால் உட்கொள்வதால் அல்கஹால் கல்லீரல் நோய் ஏற்படுகிறது.

அல்கஹால் அல்லாதது கொழுப்பின் அளவு மற்றும் மரபியல் இயக்கங்களின் காரணமாக ஏற்படுகிறது.

கல்லீரலில் நச்சுக்கள் அதிகம் இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை நமக்கு உணர்த்தும். அவ்வாறான சில அறிகுறிகள்

அலர்ஜி

கல்லீரல் சரியாக செயல்பட்டு வந்தால், உடலில் அலர்ஜியை உண்டாக்கும் நச்சுக்களை அழிக்கும் . அதுவே கல்லீரல் மோசமாக செயல்பாட்டுடன் சரியான வடிவில் இல்லாமல் இருந்தால், உடலில் அலர்ஜிக்கு காரணமான நச்சுக்கள் தேங்கி, மூளையானது அரிப்புக்கள், தலைவலியை உண்டாக்கும் ஹிஸ்டமைனை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும்.

களைப்பு

கல்லீரலில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்தால், அது தசை வலி மற்றும் களைப்பை உண்டாக்கி, மனநிலையில் ஏற்ற இறக்கத்தையும், மன இறுக்கத்தையும் ஏற்படுத்தும்.

திடீர் உடல் பருமன்

கல்லீரல் சரியாக செயல்படாமல் இருந்தால், உடலை திடமாக வைத்துக் கொள்வதில் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும். ஏனெனில் மோசமான கல்லீரல் செயல்பாட்டினால், உடலில் கொழுப்புக்கள் மற்றும் நச்சுக்கள் உடலிலேயே தங்கி தேங்க ஆரம்பிக்கிறது. இதன் விளைவாக உடல் எடையைக் குறைப்பதில் கஷ்டத்தை சந்தித்து, உடலைத் திடமாக வைத்துக் கொள்ள முடியாமல் அவஸ்தைப்படக்கூடும்.

அதிகப்படியான வியர்வை

கல்லீரலின் முறையான செயல்பாடு குறையும் போது, அது மிகவும் வெப்பமாகிவிடும். உடல் வெப்பம் அதிகரிக்கும் போது, அதன் விளைவாக அதிகப்படியான வியர்வை வெளியேறும். ஆகவே உங்களுக்கு திடீரென்று வியர்வை அதிகமாக வெளியேறினால், உங்கள் கல்லீரலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.

வாய் துர்நாற்றம்

வாயின் ஆரோக்கியம் எப்போதுமே மிகவும் முக்கியம். ஒருவர் கடுமையான வாய் துர்நாற்றத்தால் அவஸ்தைப்பட்டால், அவர்களுக்கு கல்லீரல் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. அத்தகையவர்கள் உடனே மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.

முகப்பரு

ஒருவரது உடலில் உள்ள உறுப்புக்கள் சரியாக செயல்படாமல் இருந்தாலோ அல்லது ஹோர்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டாலோ, அவர்கள் முகப்பரு பிரச்சனையை சந்திப்பார்கள். முகப்பரு பிரச்சனையானது கல்லீரல் பிரச்சனையால் ஏற்படுவதாகும். உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருமாயின், உடனே கல்லீரல் பிரச்சனை உள்ளதா என்பதை மருத்துவரை அணுகி கண்டறிந்து, சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை எடுங்கள்.

கல்லீரல் நோய்களில் இருந்து பாதுகாக்கும் உணவுகள்:

உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதுவும் வாழைப்பழம், இஞ்சி அல்லது டான்டேலியன் வேர் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பானம் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்கள், சுவையான ஒரு பானத்தை தயாரித்துக் குடிக்கலாம்.