முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புபொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கைவேலி மருதமடு குளத்தில் இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது .

உயிரிழந்த மாணவன் முதலாம் வட்டாரம் கைவேலி புதுக்குடியிருப்பபைச் சேர்ந்த 20 வயதுடைய பிரதீப்குமார் வளர்சிகன் என தெரியவருகின்றது.

மேலும் இம் மாணவன் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் உயர்தரப்பரீட்சைக்கு 2019 இல் தோற்றி மாவட்ட ரீதியில் 3 ம் நிலையை பெற்று சாதனை படைத்துள்ளார் எனவும் அறியவருகின்றது.

சடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here