காணாமல்போன மகனைத் தேடியலைந்து போராடிய தாய் மகனை காணாமேலேயே மரணம்!

144

கடந்த யுத்த காலத்தில் காணாமலாக்கப்பட்ட தனது மகனைத் தேடியலைந்து போராடி நீதிகோரிவந்த தாயொருவர் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி (வயது 61) என்ற தாயாரே, இன்று (செவ்வாய்க்கிழமை) இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இவரது மகன் தருமகுலநாதன் (வயது 39) என்பவர் கடந்த 2000ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமலாக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரைத்தேடி வவுனியாவில் ஆயிரத்து 465 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறைப் போராட்டத்திலும் குறித்த தாய் கலந்துகொண்டு தனது மகனை கண்டுபிடித்து தருமாறு போராட்டாங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: