காரணமேயின்றி வைரலாகும் புகைப்படம் !

150

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா எனும் இடத்தில் கடந்த 2-ஆம் திகதி திருமணம்ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த திருமணத்தில் மணப் பெண் மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட நிலையில் , மணமகனோ உடலில் காயங்களுடன் காற்சட்டை மாத்திரம் அணிந்த படி, திருமண மேடையில் அமர்ந்திருந்தார்.

குறித்த காட்சியை சிலர் புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிடவே , அதை ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த புகைப்படத்தை வெளியிட, அது 14500-க்கும் மேற்பட்ட லைக்குகளையும், 2500-க்கும் மேற்பட்ட ரீடுவிட்களையும் பெற்றது.இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் கிண்டலான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன்பு, மணமகன் பெட்ரோல் வாங்குவதற்காக வெளியில் சென்றபோது ஏற்பட்ட விபத்தினால் உடலில் காயங்கள் ஏற்பட்டதாகவும் அதனால் மணமகன் ஆடை அணிய முடியவில்லை என்றும் அதுமட்டுமின்றி அவர் அந்த விபத்தின் காரணமாக திடீரென்று சுயநினைவை இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: