வாழைச்சேனை- கறுவாக்கேணி குறுக்கு வீதியோரத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சடலம் இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
வாழைச்சேனை கறுவாக்கேணி பிரதான வீதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான வேலாயுதப்பிள்ளை தங்கராசா (வயது 59) என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் தனது கறுவாக்கேணி பாரதி வீதியிலுள்ள வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாக வீட்டிற்கு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் தேடிச் சென்று பார்த்தபோது, வீதியோரத்தில் விழுந்த நிலையில் சடலமாக காணப்பட்டதையடுத்து, வாழைச்சேனை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்:
- சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் மூச்சுத்திணறல்- தற்போதைய நிலை என்ன?
- விமானத்தில் பயணித்த 7 வயது சிறுமிக்கு நடுவானில் பறிபோன உயிர்
- முல்லைத்தீவில் ஐம்பொன் புத்தர் சிலையை விற்பனை செய்ய முயன்றவர்களுக்கு நேர்ந்த கதி..!
- ரஞ்சன் விடுதலையாவதற்கு ஒரே வழி இதுதான்; செய்வார்களா?
- மட்டு. போதனா வைத்தியசாலை தாதியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!
- அமெரிக்காவிலும் கட்டாய இராணுவ பயிற்சி உண்டு-இதில் தவறு என்ன? கோட்டா அரசு கேள்வி?
- இவதான் எனது துணைவி; உலகையே தமிழரை திரும்பிப்பார்க்க வைத்த டக்ளசின் மனைவி!
- 12 யானைகள் இறப்பு;31 யானைகள் மாயம்-நடந்தது என்ன?
- உலகின் முதல் கொரோனா நோயாளி மாயம்; உலக சுகாதார அமைப்பு முக்கிய தகவல்!
- தம்மிக்க பண்டாரவுக்கெதிராக முறைப்பாடு பதிவு.!என்ன தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்