குசல் மென்டிஸ்க்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

0
52

சமீபத்தில் இலங்கை அணி வீரர் குசல் மென்டிஸ் பயணித்த வாகனத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் தற்போது குசல் மென்டிஸ்க்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

மேலும் நேற்றைய தினம் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவன தலைமையகத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் செயற்குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக குறித்த நிறுவனத்தின் சிரேஷ்ட செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

எனினும் இது தொடர்பான விசாரணையை நடத்த கிரிக்கெட்டின் ஒழுக்காற்றுக் குழுவுக்கு அறிவிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட பொதுக் கூட்டம் தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.