ரஞ்சன் ராமநாயக்கவிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

0
195

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியதாக சமூகத்தின் கொழும்பு செய்தியாளர் குறிப்பிட்டார்.

பௌத்த குருமார்கள் குறித்து ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே இதன்போது அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ரஞ்சன் ராமநாயக்க பல தடவைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.