வைஸ் மற்றும் வெஸ்டர்ன் யூனியன் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து சர்வதேச பணப் பரிமாற்றத்தை அனுமதிக்க கூகிள் பே (google pay )முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கூகிள் பே இப்போது அமெரிக்காவில் இருக்கும் பயனர்களிடமிருந்து சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு பரிவர்த்தனைகளை அனுமதிக்க புதிய வசதிகளைச் சேர்க்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

அமெரிக்க கூகிள் பே பயனர்கள் வெஸ்டர்ன் யூனியன் மூலம் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பல்வேறு பிராந்தியங்களில் உள்ளவர்களுக்கும், வைஸ் மூலம் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளவர்களுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் பணம் அனுப்ப முடியும் வசதியைச் சேர்க்க கூகிள் எதிர்பார்க்கின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

பண பரிமாற்றங்கள் தற்போது அமெரிக்காவிலிருந்து இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. சர்வதேச அளவில் பணத்தை அனுப்ப, நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் Google Pay பயனரைத் தேடி, “Pay” எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, வெஸ்டர்ன் யூனியன் அல்லது வைஸ் ஏதேனும் ஒன்றின் மூலம் பணம் அனுப்ப முடியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: