கொரோனாவிலிருந்து மீண்ட காற்பந்தாட்ட வீரர்…!

0
58

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான பார்ஷிலோனா காற்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் சேவி ஹெர்ணான்டஸ் குணமடைந்துள்ளார்.

இதனை அவர் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்நிலையில் கட்டாரின் அல் சாத் காற்பந்தாட்ட அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மீண்டும் தமது கடமைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அண்மையில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் போது பார்ஷிலோனா காற்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் சேவி ஹெர்ணான்டஸூக்கு கொவிட்-19 தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.