கொரோனாவால் பலியான பிரபல இளம் இசையமைப்பாளர்

0
79

ஹிந்தி திரை உலகத்தின் மிக பெரிய இசை அமைப்பாளராக 42 வயதான வாஜித் கான் நேற்று உயிரிழந்துள்ளார். இவரது இறப்புக்கு பாலிவுட் திரையுலகம் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, இந்த ஊரடங்கு காலத்தில் பாலிவுட் இல் பல சாதனைகளை படைத்த நடிகர்களான இர்பான் கான் மற்றும் ரிஷி கபூர் ஆகியோரின் அடுத்தடுத்த மரணம் திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், அவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாமல் பலரும் வேதனை தெரிவித்தனர். இந்நிலையில் மேலும் ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்பு அவர்களை மற்றொரு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாஜித் கான் அவர்கள் 1998ம் ஆனது சல்மான் கான் அவர்களது “பியார் கியா தோ டர்னா கியா”என்ற திரைப்படம் மூலமாக பாலிவுட் திரை உலகுக்கு ஒரு இசை அமைப்பாளராக அறிமுகனார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ஆனால், அதிகப்படியாக சல்மான் கான் அவர்களுக்குள் தான் இசை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாஜித் கான் அவர்களுக்கு ஏற்கனவே சிறுநீரக தோற்று இருந்துள்ளது இந்நிலையில் கொரோனா தோற்றும் ஏற்பட்டதால் நோய்எதிர்ப்பு சக்தி குறைபாட்டின் காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது இறப்பு குறித்து பல பிரபலங்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாததால் சமூக வலைதள வாயிலாக பிரபலன்களான பிரியங்கா சோப்ரா, சல்மான் கான், பரினீதி சோப்ரா, ஷ்ரேயா கோஷால் ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.