கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை குரங்கில் தோல்வி

0
73

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறிவதில் பிரிட்டனைச் சேர்ந்த ஒக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் ஈடுபட்டு இருந்தது.

இதனையடுத்து ஒக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் உருவாக்கிய தடுப்பு மருந்தான சாடோக்ஸ் 1 என்கோவ் 19 ((ChAdOx1 nCoV-19,)) பரிசோதனையின் முதற்கட்டமாக குரங்கிற்கு செலுத்தப்பட்டது.

குரங்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தப்பட்டு, அதற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட குரங்குகளின் மூக்கில் கொரோனா வைரஸ் மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், சில குரங்குகளிடம் வேகமான மூச்சிறைக்கும் தன்மை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட மற்றும் கொடுக்கப்படாத குரங்குகளுக்கு வைரஸ் பாதிப்பில் ஒரேவிதமான நிலையே இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த தடுப்பு மருந்து சாதாரண சளிக்கு நல்ல பலனை அளிப்பதாக இருந்துள்ளது.

இந்த தடுப்பு மருந்து நிமோனியாவை கட்டுப்படுத்தி உள்ளது.குரங்கிற்கு பரிசோதனை செய்து பார்த்ததில் எந்த பலனும் அளிக்காத காரணத்தினால், மனிதர்களுக்கும் இந்த மருந்து பலன் அளிக்காது என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்து இருப்பதாகத் தெரிகிறது.

இந்த தடுப்பு ஊசி வெற்றி பெற்றால் 30 மில்லியன் ஊசிகளை தயாரிப்பது என்று ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனிகா மருந்து நிறுவனத்துடன் பிரிட்டன் அரசு ஒப்பந்தம் செய்து கொண்டு இருந்தது.

தற்போது குரங்கிற்கான பரிசோதனையில் தோல்வியை தழுவியதை அடுத்து, இந்த ஒப்பந்தத்தை பிரிட்டன் அரசு முறித்துக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here