கொரோனா பற்றி புதிய தகவல் கசிவு

0
558

கொரோனா வைரஸ் 6 அடி தூரம் வரைதான் பரவும் என்பதை பொய்யாக்கும் விதமாக 20 அடி தூரம் வரை பரவும் என அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.   

இனி வருகின்ற குளிர்காலத்தில் இந்தியாவில் அது மும்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

இருமல், சளி, எச்சில் துப்புதல் போன்றவற்றால் கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவுகிறது. 

பேசுவதன் மூலமாகவும் தெறிக்கும் துளிகளில் கொரோனா வைரஸ் பரவுகிறது. 

இதன் மூலம் தொற்று உடைய 40 ஆயிரம் துளிகள் வெளியேறுகின்றன.

புவியீர்ப்பு சக்தியால் பெரும்பாலும் இவை நிலத்தில் உதிர்ந்து விடுகின்றன. எனினும் சில துளிகள் காற்றில் மிதந்தபடி பல மணிநேரம் நீடிக்கின்றன.

இவற்றால் 6 அடி வரைதான் பாதிப்பு என கடந்தகால ஆய்வுகள் தெரிவித்த நிலையில் 20 அடி துரம் வரை நோய் நுண்தொற்று பரவக்கூடும் என்று புதிய ஆய்வுகள் எச்சரித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here