சட்டவிரோதமாக கல்முனை கண்ணகி கோவில் வீதியில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.

அண்மைக்காலமாக குறித்த வீதியின் அருகில் உள்ள வெற்று காணியில் இரவில் இனம்தெரியாத நபர்களால் ஆலயச் சூழலில் பெருமளவு கழிவுகள் வீசப்பட்டுள்ளன. 

இதனால் குறித்த காணியில் குப்பைகள் தேங்கி காணப்படுவதுடன் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.

இப்பகுதியில் கல்முனை மாநகர சபை திண்மக்கழிவுகளை சீராக அகற்றி வந்த போதிலும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஒருவரே தடையாக இருப்பதாக மக்கள் தெரிவித்தனர். 

குறித்த மாநகர சபை உறுப்பினர் அப்பகுதி மக்களுக்கு கல்முனை மாநகர சபையினால் திண்மக்கழிவிற்கென அறவிடப்படும்  50 ரூபாவை  வழங்க வேண்டாம் என தெரிவித்த நிலையில் அப்பகுதிக்கு கல்முனை மாநகரசபையினால் கழிவுகள் முறையாக தற்போது அகற்றப்பட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

எனவே இதற்கான தீர்வை .பெற்றுத் தருமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here