சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானத்தை அருந்தி 86 பேர் பலி…!

0
121

வட இந்திய பஞ்சாப் மாநிலத்தில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட நச்சுகலந்த மதுபானத்தை அருந்தி மரணித்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

எனினும் இது தவிர, பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்நிலையில், சட்ட விரோதமாக மதுபானம் உற்பத்தி செய்யப்படும் சந்தேகத்திற்கு இடமான நூற்றுக்கும் அதிகமான பிரதேசங்களில் காவல்துறையினர் சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டு 25 பேரை கைது செய்துள்ளனர்கள்.

இந்தியாவின் கிராமிய பிரதேசங்களில் சட்டவிரோதமான மதுபானங்களை அருந்துவதனால் வருடாந்தம் நூற்றுக் கணக்கானவர்கள் பலியாகின்றார்கள்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை ஒன்றினை மேற்கொண்டு உடனடியாக அறிக்கை ஒன்றினை வழங்கும்படி பஞ்சாப் முதலமைச்சர் அமிரிண்ட சிங் உத்தரவிட்டுள்ளார்.