சரும வறட்சியை போக்கும் உருளைக்கிழங்கு…!

57

உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சம அளவில் எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

சருமத்தில் உள்ள அதிகப்படியான வறட்சியை போக்கி, அழகை அதிகரிக்க வேண்டுமானால், வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து, அதில் பால் பவுடர் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

சருமத்திலுள்ள அழுக்குகளை நீக்க, வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கை தோல் நீக்காமல் அரைத்து, பின் அதில் 1 முட்டை, சிறிது தயிர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

இளமைத் தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ள உருளைக்கிழங்கை அரைத்து, அதில் சிறிது ஆப்பிள் சாஸ் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

கண்களின் சோர்வை நீக்க, உருளைக்கிழங்கு துண்டுகளை சிறிதுநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை கண்களின் மேல் வைக்க வேண்டும்.

இதனை கண்கள் சோர்வுடன் இருக்கும் போது செய்தால், கண்களின் சோர்வானது உடனே நீங்கும்.உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதனை துண்டுகளாக்கி, கண்களின் மேல் 20 நிமிடம் வைத்தால், உருளைக்கிழங்கில் உள்ள நொதியானது கருவளையத்தைப் போக்கும்.

தினமும் உருளைக்கிழங்கு சாற்றினை சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், சரும சுருக்கங்கள் மட்டுமின்றி, முகப்பரு, சரும நிற மாற்றம் போன்ற அனைத்தும் நீங்கிவிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: