சர்வதேச தமிழ் திரைப்பட விழாவிற்கு ‘தட்றோம் தூக்றோம்’ தெரிவு!

0
100

‘தட்றோம் தூக்றோம்’ புதுமுக இயக்குநர் அருள் எஸ் இயக்கத்தில் , மீடியா மார்ஷல் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள அதிரடியான தமிழ்த் திரைப்படம் . 

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷின் மூத்த மகனாக நடித்த டீஜெய் அருணாச்சலம் இந்தப் படத்தில் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக புதுமுக நாயகி பௌசியும் நடித்துள்ளார். 

இத்திரைப்படம் 2016-ம் வருடம் இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பண மதிப்பு இழப்பை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட கற்பனை கலந்த திரைப்படம். 

அத்தோடு, படத்திற்க்கு பாலமுரளி பாலு இசை அமைக்க சிலம்பரசன் படத்தின் மிக முக்கியமான கபிலன் வைரமுத்து எழுதிய பணமதிப்பிழப்பு பாடலை பாடியுள்ளார்.

மேலும், இந்தப் படத்தில் சீனு மோகன், காளி வெங்கட், லிங்கா, மாரிமுத்து, ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

படத்தின் டிரெய்லர் ஏற்கனவே இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு பத்து இலட்சம் பார்வைகளைக் கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. படம் தணிக்கை குழுவினரால் தணிக்கை செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி படக் குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

இதற்காக டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழா குழுவினருக்கும் மற்றும் அனைவருக்கும் மீடியா மார்ஷல் நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்திருக்கிறது. ‘தட்றோம் தூக்றோம்’ திரைப்படம் விரைவில் தியேட்டர்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.