சர்வதேச திரைப்பட விழாவில் ‘சில்லுக்கருப்பட்டிக்கு’ விருது

0
96

சர்வதேச திரைப்பட விழாவில் கடந்தாண்டு ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியாகிய ‘சில்லுக்கருப்பட்டி’ படத்திற்கு விருது கிடைத்துள்ளது.

டிவைன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரிப்பில் வெளியான இப்படமானது வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றதுள்ளது.

சில்லுக்கருப்பட்டி – நகரப் பின்னணியில் நான்கு அழகான குறுங்கதைகளைப் பற்றிக் கூறும் ஆந்தாலஜி வகை திரைப்படமாகும்.

இப்படத்தின் கதாப்பாத்திரங்களாக சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜூன், மணிகண்டன், நிவேதிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். அத்தோடு 2D எண்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இப்படம் டொரண்டோவில் நடைபெறும் தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.

அப்படத்தின் இயக்குனர் ஹலிதா தனது சமூக வலைத்தள பக்கத்தில், திரைப்பட விழாக்களில் இதுபோன்ற விருதுகள் கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இப்படம், கடந்தாண்டு சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் சிறந்த திரைப்படத்திற்கான இரண்டாவது பரிசை வென்றது.